நாளை சுதந்திர தினம்: உச்சகட்ட பாதுகாப்பில் போலீசார் தீவிரம்
நெல்லை: சுதந்திர தின விழாவையொட்டி ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் இன்று மாலை முதல் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.
மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். விழாவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தீவிரவாதிகளின் மிரட்டலை அடுத்து ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் பிரைம் பொருத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. பயணிகள் உடமைகள் மற்றும் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் சோதனையிடப்படுகின்றன.
ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்களிலும் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில்களில் மர்ம பார்சல்கள் மற்றும் சூட்கேஸ்கள் எதுவும் இருந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ, ரயில்வே போலீசுக்கோ தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications