தென்காசி பகுதியில் மழை: ஐந்து அருவியில் வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை தாமதமாகத் துவங்கியதோடு மட்டுமல்லாமல் கண்ணாமூச்சி ஆடி வந்தது. இதனால் குற்றால அருவிகளில் சீசன் காலத்தில் தண்ணீர் சரியாக இல்லை. ஏதோ விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகளும் குளித்து வந்தனர். நல்ல மழை பெய்யாதா அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து விழாதா என்று சுற்றுலாப் பயணிகள் ஏங்கினர்.
இந்நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஐந்து அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஐந்து அருவியில் சுமார் அரை மணி நேரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை வாபஸ் பெறப்பட்டது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் விவசாய பணிகளை துவங்க எதுவாக இருக்கும்.












Click it and Unblock the Notifications