சென்னையிலும் பீதி... வட கிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர், ஹைதராபாத்தைத் தொடர்ந்து தற்போது சென்னையிலிருந்தும் ஆயிரக்கணக்கான வட கிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலஙக்ளுக்குக் கிளம்பத் தொடங்கியுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் வசித்து வரும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று வதந்தி பரவி வருகிறது. இதையடுத்து பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வட கிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சாரை சாரையாக போய்க் கொண்டுள்ளனர்.

இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிளம்பத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் வேலை பார்த்து வரும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் பெட்டி படுக்கைகளுடன் நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திப்ரூகர் செல்லும் ரயிலில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள். அந்த வண்டியில் வழக்கமாக உள்ள 4 பொதுப் பெட்டிகளுடன், கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு அதில் வடமாநிலத்தவர்கள் புறப்பட்டு சென்றார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+