உயர் அதிகாரிகளின் சித்ரவதை- டெல்லியில் செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வீரர் போராட்டம்
டெல்லி: ராணுவ உயர் அதிகாரிகளின் சித்திரவதையைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் முத்து என்பவர் 2 நாட்களாக தலைநகர் டெல்லியில் உள்ள செல்போன் கோபுர உச்சியில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார். அவரை ராணுவ துணை தளபதி லெப். ஜெனரல் எஸ்.கே.சிங் நேரில் சென்று சமாதானப்படுத்த முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் ரெஜிமெண்ட் பிரிவில் பணியாற்றுபவர் கே.முத்து. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் டெல்லி ரயில் நிலையம் அருகே அஜ்மீர் கேட் பகுதி செல்போன் கோபுர உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டார். தம்மை ராணுவ அமைச்சர் அந்தோணியை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமது போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் கூறிய முத்து, தம்மை 5 முறை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இது எனக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டு ராணுவ வீரர்களும் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர் என்றார் மேலும் தமக்கு 6 மாத கால ஊதிய நிலுவையும் இருப்பதாகவும் முத்து புகார் கூறியுள்ளா. முத்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தும் இடத்துக்கு ராணுவ துணை தளபதி லெப்.ஜெனரல் எஸ்.கே.சிங் நேற்று சென்றார். அவர் முத்துவுடன் 30 நிமிடம் தொலைபேசியில் பேசினார். ஆனால் அவரது வாக்குறுதியை தாம் நம்பவில்லை என்று முத்து கூறிவிட்டார்.
முத்துவுடன் பணியாற்றும் சக வீரர்கள் ஒவ்வொருவராக ஏறிச் சென்று அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் முத்து விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் டெல்லி ரயில் நிலைய பகுதியில் பரபரப்பு நிலவியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications