இலங்கையில் இன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ரம்ஜான் பெருநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இலங்கை மன்னார் மாவட்டத்தில் கூளாங்குளத்திலும், கொழும்பு முகத்துவாரத்திலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டது.
இதைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பெற்ற பிறைக்குழு மற்றும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமய கலாசாரத் துறையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இன்று ரம்ஜான் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று இலங்கையில் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் நாளை ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications