கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்திற்கே தர வேண்டும்-பிரதமருக்கு மீண்டும் ஜெ. கோரிக்கை

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே அவர் 2 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் இதுவரை அவர் பதில் தரவில்லை. இந்தநிலையில் மூன்றாவது முறையாக அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த முறை ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் யூனிட்டில் இருந்து தயாரிக்கப்படும் 1000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்குத் தர வேண்டும் என்று நான் முன்னர் எழுதிய 2012 மார்ச் 31 மற்றும் 2012 ஏப்ரல் 25ம் தேதியிட்ட இரு கடிதங்கள் குறித்து நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால், இதுவரை தங்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் விரைவில் துவங்கவிருக்கிறது என்பதை அறிந்தேன். இந்த நிலையில், முன்னர் நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவற்றுக்கு தகுந்த பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்காவது பிரதமர் பதிலளிப்பாரா அல்லது வழக்கம் போல கம்மென்று இருப்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications