ஹலோ, உங்க செல்போனுக்கு இன்னிக்கு 18 வயசு... தெரியுமா?

ஒரு காலத்தில் தகவல் சொல்ல வேண்டுமென்றால் யாராவது ஆளை அனுப்ப வேண்டும். பிறகு தொலைபேசி வந்தது. பின்னர் டிரங்க் கால் வந்தது. அதன் பிறகு தொலைபேசியில் நவீனம் புகுந்தது. பின்னர் தந்தி வந்தது, பேக்ஸ் வந்தது. அதன் பின்னர் பேஜர் வந்தது. கடைசியாக வந்த தொழில்நுட்பம்தான் செல்போன் எனப்படும் மொபைல் போன்.
செல்போன் வந்ததற்குப் பிறகு உலகமே தலைகீழாக மாறி விட்டது. நினைத்ததை நினைத்த நேரத்தில் எங்கிருந்தாலும் பேச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதிலும் குறுந்தகவல் எனப்படும் எஸ்எம்எஸ் வந்த பிறகு அடேங்கப்பா... எப்படியெல்லாம் டெவலப் ஆயிட்டாங்க நம்மாளுங்க. லவ்வை சொல்வதிலாகட்டும், வதந்திகளைப் பரப்புவதிலாகட்டும், பின்னிப் பெடலெடுத்து வருகிறோம்.
உலக நாடுகளில் எப்போதோ செல்போன்கள் வந்து விட்டாலும் கூட இந்தியாவைப் பொறுத்தவரை 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதிதான் செல்போன் அறிமுகமானது. அப்போதெல்லாம் செல்போன் சாதனங்கள் செங்கல் சைஸுக்கு இருந்தது. செங்கல் போன் என்றுதான் பலரும் அப்போது செல்லமாக சொல்லிக் கொள்வர். பெரிய பெரிய சைஸில் செல்போன்களை வைத்துக் கொண்டு அந்த சமயத்தில் நிறையப் பேர் கர்வத்துடன் அலைந்த காலம் அது.
ஆரம்பத்தில் பணக்காரர்கள் கையில்தான் செல்போன் இருந்தது. காரணம், இன்கமிங்குக்கும் ஏகப்பட்ட காசைக் கொட்ட வேண்டியிருந்ததால். பின்னர் செல்போன் சேவைகள் மேம்பட்டு, சாதனங்களின் விலையும் குறைந்து, கட்டணங்களும் குறைந்த பின்னர் இப்போது மாட்டு வண்டி ஓட்டும் மன்னாரு முதல் மாடி வீட்டு கோடீஸ்வரர்கள் வரையில் ஒரே மாதிரியான செல்போன்களைப் பார்க்க முடிகிறது.
சாதாரண கொத்தனார் கூட கொரியா போனுடன்தான் பாட்டு கேட்டபடி -பெரும்பாலும் இளையராஜா பாட்டுதான் - கலவை சுமக்கிறார், வீடு கட்டுகிறார்.
இன்று ஏகப்பட்ட வசதிகளுடன் எக்குத்தப்பாக வளர்ந்து நிற்கும் செல்போனுக்கு இந்தியாவில் இன்று 18வது பிறந்த நாள். உங்களுக்கு நீங்களே ஒரு வாழ்த்து எஸ்.எம்.எஸ். அனுப்பி சிம்பிளாக கொண்டாடி விடுங்களேன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications