குரூ2 தேர்வு வினாத்தாளை அவுட் ஆக்கிய பாலனை பிடிக்க தனிப்படை தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாளை அவுட்டாக்கிய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாலனை பற்றி கூடுதல் தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கூட்டாளிகள் கைது

குரூப் 2 தேர்வு வினாத்தாள் அவுட் ஆன விவகாரத்தில் தேர்வு எழுதிய தனக்கொடி, அவரது கணவர் செந்தில், பேராசிரியர்கள் சுதாகர், வரதராஜன் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் வரதராஜனை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த பாலன் என்பவர் மூலம் வினாத்தாள் வெளியானது தெரியவந்தது. சென்னையில் இருந்த பாலன் தற்போது தலைமறைவாகிவிட்டான். பாலனின் கூட்டாளிகளான சதீஷ், மோகன்பாபு, ஜெய்ஸ்ரீனிவாசன் ஆகியோர் இன்று சிக்கினர். இதில் சதீஷின் இ மெயிலில் இருந்துதான் ஈரோடு மாவட்டத்துக்கு குரூப்-2 வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

யார் இந்த பாலன்?

பாலன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பிய நபரின் பெயர் ஸ்ரீதர்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் மாநில அளவில் 5ம் இடத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அவருக்கு பணிக்கான உத்தரவு கொடுக்கப்படவில்லை.

தற்போது பாலன் என்கிற ஸ்ரீதர்ராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை பிடித்தால்தான், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய கறுப்பு ஆடு யார் என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+