அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் ஜிம்முக்கு ஓடும் மிஷல் ஒபாமா!

Subscribe to Oneindia Tamil

Michelle Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா தனது உடல் ஆரோக்கியத்தை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் நம்பர் ஒன்னாக திகழ்கிறார். மாணவியாக இருந்தபோது அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் அவர் உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்குப் போய் விடுவாராம். இன்று வரை உடற்பயிற்சியில் அவர் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப் பருவத்தில் அவர் இருந்தபோது அதிகாலை 4.30 மணி அல்லது 5 மணிக்கெல்லாம் எழுந்து ஜிம்முக்கு ஓடி விடுவாராம். இப்போதும் கூட அப்படித்தானாம். தனது குழந்தைகள் எழுந்திருப்பதற்கு முன்பே மிஷல் எழுந்து உடற்பயிற்சியைத் தொடங்கி விடுகிறாராம்.

இந்தத் தகவலை அவரே தெரிவித்துள்ளார். ஐவில்லேஜ் என்ற பெண்களுக்கான இணையதளத்திற்கு அளித்த பேட்டியில்தான் இதைக் கூறியுள்ளார் மிஷல். இந்த வார விருந்தினராக அந்த இணையதளத்தின் பேட்டியில் கலந்து கொண்டு இந்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார் மிஷல்.

பேட்டியில் மிஷல் கூறுகையில், நானும் ஒபாமாவும் அதிகாலையிலேயே எழுந்து விடுவோம். இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்வோம். அவருக்கு முன்பாகவே நான் போய் விடுவேன். நான் பாதி உடற்பயிற்சியை முடித்திருக்கும்போதுதான் அவர் வந்து சேருவார். சில சமயங்களில் நான் எனது உடற்பயிற்சியை முடிக்குப் போகும் சமயத்தில்தான் வருவார்.

ஜம்ம்பிங் ஜாக்ஸ், புஸ் அப்ஸ், சிட் அப்ஸ் என அரை மணி நேரம் தொடர்ந்து செய்வேன். பிறகு அரை மணி நேரம் இடைவெளி விட்டு விட்டு மறுபடியும் தொடருவேன் என்று கூறியுள்ள மிஷல், தனது வீட்டினருக்கு எது ரொம்பப் பிடித்த உணவு என்பதையும் கூறியுள்ளார்.

எனது மகள் மலியாவுக்கு ஜூஸ் என்றால் உயிர். அதைக் குறைத்துக் கொண்டு அதிக அளவில் தண்ணீர் குடிக்குமாறு கூறி வருகிறேன், எங்கே கேட்டால்தானே...

ஒபாமவுக்கு சிப்ஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும். உடம்புக்கு ஆகாது என்றால் கேட்க மாட்டேன் என்கிறார்.

எனக்கு பிரெஞ்சு பிரை என்றால் பிடிக்கும். எங்காவது அதைப் பார்த்து விட்டால் போதும், மேய்ந்து விடுவேன் என்றார் சிரித்தபடி.

ஆளாளுக்கு ஒரு விருப்ப உணவை கொறித்தாலும் கூட தனது கணவர் மற்றும் மகள்களின் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஐட்டங்களை கண்ணில் கூட காட்ட மாட்டாராம் மிஷல்.

கறாரான மனைவிதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+