மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் துவக்க விழாவில் கலந்து கொள்ளும் ஸ்டீபன் ஹாக்கிங்

Subscribe to Oneindia Tamil

Stephen Hawking
லண்டன்: லண்டனில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவில் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கலந்து கொள்கிறார்.

லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் வரும் 29ம் தேதி துவங்கி செப்டம்பர் 9ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகளைக் காண 2.2 மில்லியன் பேர் டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். பாராலிம்பிக் துவக்க விழாவில் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் கலந்து கொள்கிறார்.

Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான 70 வயதாகும் ஹாக்கிங்ஸ், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது. இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.

வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஹாக்கின்ஸ் உரையை வீடியோவில் பதிவு செய்து திரையிடலாம் என்றும் கூறப்படுகிறது. ஸ்டீபன் ஒரு நாளும் தனது குறைகள் தனது கனவை நனவாக்க தடையாக நிற்கவிட்டதில்லை. இங்கிலாந்தில் பிறந்த சிறந்த திறமையாளர்களில் ஒருவர் ஸ்டீபன். அப்படிபட்டவர் பாராலிம்பிக் துவக்க விழாவில் கலந்து கொள்வது த்ரில்லாக உள்ளது என்று ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவைப் போன்று பாராலிம்பிக் துவக்க விழாவும் பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+