குஜராத் வன்முறையுடன் அசாம் இனமோதலை ஒப்பிடக்கூடாது: அசாம் முதல்வர் தருண் கோகாய்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:
குஜராத்தில் மாநில அரசே வன்முறையைத் தூண்டிவிட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த மாதங்கள் ஆயின. பல ஆயிரம்பேர் உயிரிழந்தனர். ஆனால் அசாமில் நடந்திருப்பதோ வேறு. இங்கு நிலைமையை ஒரே வாரத்தில் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.
அசாமில் அண்மையில் நிகழ்ந்த மோதலின் தொடக்கத்தில் மத்திய படைகளை அனுப்புவதில் சிறிது தாமதம் இருந்தது உண்மைதான். அசாம் இனமோதல்களுக்கு சட்ட்விரோத குடியேற்றங்களே காரணம் என்று கண்மூடித்தனமாக பாஜக தலைவர் எல்.கே. அத்வானி கருத்து தெரிவித்திருக்கிறார். மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்துவிடவில்லை. இரண்டு மாவட்டங்களில்தான் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. அத்வானி உள்துறை அமைச்சராக அத்வானி இருந்தபோது வங்கதேச எல்லையில் வேலிகள் அமைக்க அவர் எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்றார் கோகாய்.
அசாமின் கோக்ராஜர் உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையேயான மோதலால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அசாமைப் போல பிற மாநிலங்களிலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தால் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் தங்களது சொந்த மாநிலங்களுக்கும் திரும்பியிருக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications