கூண்டோடு பாஜக எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் ....?: காங். கூட்டணி தீவிர ஆலோசனை

நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகியாக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் அமைச்சர் ப. சிதம்பரத்தையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க மறுப்பதைக் கண்டித்து அக்குழுவில் இருந்து ஒட்டுமொத்தமாக பாஜக உறுப்பினர்கள் விலகியுள்ளனர். இது காங்கிரஸ் கூட்டணியை அதிர்வடையச் செய்திருக்கிறது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதுபற்ரி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் இருந்து விலகி புது நெருக்கடியைக் கொடுத்திருப்பது போல்.. நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஒட்டுமொத்த மக்களவை பாஜக உறுப்பினர்களுமே ராஜினாமா செய்துவிட்டால் எப்படி எதிர்கொள்வது என்ற கோணத்திலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
மக்களவைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 20 மாதங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பாஜகவின் 114 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துவிட்டால் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது முன்கூட்டியே பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.
இடைத்தேர்தலா? முன்கூட்டியே பொதுத்தேர்தலா? என்பது பற்றி நேற்றைய கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதத்தில் பெரும்பாலான கட்சிகள், இடைத்தேர்தலை நடத்திப் பார்க்கலாம் என்கிற ரீதியில் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. அப்படி ஒரு இடைத்தேர்தல் நடத்தினால் அது ஒரு மினி பொதுத்தேர்தலாகவும் இருக்கும்.
அதாவது 114 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் இல்லையில் நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறாது.. காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான இடங்கள் கிடைக்கும். அப்படி கணிசமான இடங்கள் கிடைத்தால் அந்த வெற்றியை கணக்கில் வைத்துக் கொண்டு அடுத்து பொதுத்தேர்தலை திடமாக எதிர்கொள்ள முடியும் என்பதுதான் காங்கிரஸ் மற்றும் கூட்டணிகளின் கணக்கு என்கிறது டெல்லி அரசியல் வட்டாரங்கள்.
பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கூட்டணியின் வியூகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த கட்ட அஸ்திரத்தை ஏவக் கூடும் என்பதால் டெல்லி அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் மூழ்கியுள்ளன.
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications