என்னா ஒரு தூக்கம்! லாகூரிலிருந்து பாரீஸ் போன பெண் மீண்டும் லாகூர் திரும்பினார்!!
இஸ்லாமாபாத்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் விமானத்தில் தூங்கியதால் லாகூரில் இருந்து பாரீசுக்கு சென்ற அவர் மீண்டும் லாகூருக்கே திரும்பி வந்தார். 18 மணிநேரம் அந்த பெண்மனி தூங்கிக்கொண்டே பயணம் செய்தது எப்படி என்று இப்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பார்டீஸ் கிரிஸ்டின் அகமது என்ற அந்த பெண் செவ்வாய்கிழமையன்று லாகூரில் இருந்து பாரீசுக்கு பாகிஸ்தான் சர்வதேச விமானத்தில் ஏறி பயணம் செய்தார். விமானத்தில் ஏறிய உடன் அவர் உறங்கிவிட்டார்.
பாரீசில் விமானம் நின்றதும் பயணிகள் இறங்கியுள்ளனர். ஆனால் பார்டீஸ் இறங்கவில்லை. திரும்பவும் அதே விமானத்தின் பயணம் செய்து மறுபடியும் லாகூருக்கே வந்துவிட்டார். கிட்டத்தட்ட 12000 கிலோமீட்டர்கள் அதாவது 7700 மைல்கள் அந்த பெண் உறக்கத்திலேயே பயணம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. அந்த பெண் திரும்பவும் பாரீஸ் செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
சரி, அந்த அம்மாதான் தூங்குச்சுன்னா, விமான ஊழியர்களுமா அதைக் கவனிக்கலே. நல்ல தூக்கம் போங்க!












Click it and Unblock the Notifications