கூட்டத் தொடர் முடிந்ததும் பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஏற்றார்போல் பெட்ரோல்விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டின் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதற்கான அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
கடந்த மாதம் 24-ந் தேதியன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ7 என அதிரடியாக வரலாறு கானாத வகையில் உயர்த்தியது மத்திய அரசு. பின்னர் கொஞ்சம் மனது வைத்து பெட்ரோல் விலையைக் குறைத்தார்கள். ஆனால் அண்மைக்காலமாக எண்ணெய் நிறுவனங்களோ, வரலாறு காணாத நட்டத்தில் இயங்குகிறோம்.. அதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றன. ஆனால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதைவேற உயர்த்தி எதிர்க்கட்சிகளிடம் வாங்கிக் கட்ட கொள்ள முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் விடுவதாக இல்லை. எப்படியாவது உயர்த்தியாக வேண்டும் என்று அடம்பிடித்து நிற்கின்றன. இதனால் நடப்பு கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ3 அளவில் உயர்த்திவிடுவது என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications