20 பேரை கொடுங்க.. நானே வீதியில இறங்கி குப்பை அள்ளுகிறேன்: கர்நாடக ஆளுநர் பரத்வாஜ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரத்வாஜ் கூறியதாவது:
நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துமாறும் தான் மாநகராட்சிக்கு உத்தரவிட்டும், மாநகராட்சி நிர்வாகம் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறது.
பூங்கா நகரமான பெங்களூர், குப்பைகள் நிறைந்த நகரமாக மாறிவிட்டது. 20 பேரை தனக்கு உதவியாக அனுப்பினால், தானே வீதியில் இறங்கி குப்பைகளை அகற்ற தயாராக இருக்கிறேன். நகரை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை யாரும் மறந்து விடக்கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications