சீனாவில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து- 36 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: சீனாவின் ஷான்க்சி மாகாணத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஷான்க்சி மாகாணத்தின் யனான் நகரம் அருகே டபுள் டக்கர் பேருந்து ஒன்று 39 பேருடன் சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து டேங்கர் லாரி ஒன்றுடன் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப் பிடித்தன. இதில் சம்பவ இடத்திலேயே 36 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய மூவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications