அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிந்து கிரானைட் நிறுவனம் கட்டிய கட்டிடம் இடித்து தரைமட்டம்
மேலூர்: கிரானைட் கொள்ளையில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்றான சிந்து கிரானைட் நிறுவனம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் கோடி கிரானைட் கொள்ளை நடந்தேறியிருப்பது தமிழகத்தை உலுக்கி எடுத்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அதிகாரிகள் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா நேற்று அப்பகுதிகளைப் பார்வையிட்டார். ஓவர் மலை, பஞ்சபாண்டவர் மலை ஆகியவற்றுக்கு அருகே இருந்த ஊரணிகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அந்த ஊரணிகளை மூடிவிட்டு கிரானைட் கற்களை அடுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சிந்து கிரானைட் நிறுவனத்தினர் கட்டடம் ஒன்றையும் கட்டியிருந்தனர். இதை உடனே இடித்து தரைமட்டமாக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனிடையே திருவாதவூர் பகுதியில் உள்ள சிந்து கிரானைட் நிறுவனத்தில் வெடிபொருட்கள் லாரியில் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லாரியில் சிலர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த லாரியை அப்படியே மடக்கி கைப்பற்றியது போலீஸ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications