தென்காசி அருகே இளம்பெண் கற்பழித்து, எரித்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

Murder
தென்காசி: தென்காசி அருகே இளம்பெண் கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி அருகே உள்ள கீலப்புளியூர் சிற்றாற்றுக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததுள்ளது. அந்த பெண் அணிந்திருந்த தங்கநகைகள், கொலுசு போன்றவை அப்படியே உள்ளதால் அவர் கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் குற்றாலத்திற்கு அழைத்து வந்து கற்பழித்து கொலை செய்துவிட்டு உடலை இங்கு கொண்டு வந்து எரித்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+