நீங்க 'பெங்' பெண்ணா.. இல்லை 'பட்டர்ஸ்' பெண்ணா?
லண்டன்: ஆங்கிலத்தைப் போல ஒரு மொழியைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு பிறமொழிக் கலப்பு இதில்தான் அதிகம். உலகின் பல்வேறு மொழிகளின் வார்த்தைகளை உள்ளடக்கி ஏகப்பட்ட வார்த்தைகளுடன் வலம் வரும் மொழியான ஆங்கிலத்தில் தற்போது புதிதாக சில சொற்றொடர்கள் சேர்ந்துள்ளனவாம்.
கிட்டத்தட்ட 1000 புதிய வார்த்தைகளை சேம்பர்ஸ் தெசாரஸில் இணைத்துள்ளனராம். இந்தப் புதிய வார்த்தைகள், வேர்ட் லவ்வர்ஸ் காலிமாபிரை என்ற புதிய பிரிவின் கீழ் தொகுத்துள்ளனர்.
அதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வார்த்தைகளிலிருந்து சிலவற்றைப் பார்க்கலாம்...
நாட் ஸ்பாட் - அதாவது செல்போன் கவரேஜ் இல்லாத பகுதிக்கு நாட் ஸ்பாட் என்று பெயராம்.
பட்டர்ஸ் - அவலட்சணம் என்று அர்த்தமாம்.
பெங் - கவர்ச்சிகரமான, அழகான என்று அர்த்தமாம்.
பிளக்கிங் - பிளாக்குகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்குப் பெயர் பிளெக்கிங்காம்.
ரிங்ஸிட்டி - அட்டு ரிங்டோன்களைக் கேட்டாலே ஹார்ட் அட்டாக் வந்தது போலப் பதறிப் போய் விடுவார்கள் சிலர். அப்படிப்பட்ட பதட்டத்திற்குப் பெயர்தான் ரிங்ஸிட்டியாம்.
டிபிரண்ட்- ஒருவரை நமது பிரண்ட்ஸ் லிஸ்ட்டிலிருந்து தூக்குவதற்குப் பெயர் டிபிரண்ட்.
இன்டெக்ஸிகேட்டட்- தொடர்ந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பித் தொந்தரவு செய்வதற்குப் பெயர் இன்டெக்ஸிகேட்டட்.
இப்படி சுவாரஸ்யமான பல வார்த்தைகள் இதில் உள்ளன. இதில் பெரும்பாலானவை இன்டர்நெட், பிளாக், செல்போன்கள் தொடர்பானவை என்பது இதில் விசேஷமானது.
அப்புறம் செலபுடான்டே என்று ஒரு வார்த்தை உள்ளது. அதாவது பாரிஸ் ஹில்டன், கிம் கர்தஷியான் போன்ற கவர்ச்சி பிளஸ் பிரபலம் பிளஸ் சொத்துப்பத்துக்களுடன் கூடிய அழகுப் பெண்களாம்.
நல்லாத்தாய்யா யோசிக்கிறாய்ங்க...!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications