ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், கத்காரிக்கு கேஜ்ரிவால் 'உத்தரவு'

கேஜ்ரிவால் தலைமையில் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தினர் சில தினஙக்ளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் கத்காரி ஆகியோரது வீடுகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையில், தனது இணையதளத்தில் இவர்களுக்கு ஆளுக்கு பத்து கேள்விகளைக் கேட்டுள்ளார் கேஜ்ரிவால்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து மக்களை முட்டாள்களாக வைத்திருக்க முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கேஜ்ரிவால் மேலும் கூறியுள்ளதாவது...
மே 30ம் தேதி பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் அன்னா ஹஸாரே குழுவினர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களில் உணமை இல்லை என்று தெரிய வந்தால், நான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகுகிறேன் என்று கூறியிருந்தார். அதை பிரதமர் இன்னும் மனதில் வைத்திருக்கிறாரா....
சிஏஜி என்பது ஒரு அரசியல்சாசனப்படி அமைக்கப்பட்ட சுயேச்சையான அமைப்பாகும். பாரபட்சமின்றி செயல்படும் அமைப்பு. அந்த அமைப்பு உங்களை நோக்கி நேரடியாக விரலை நீட்டுகிறது. சம்பந்தப்பட்ட துறை உங்கள் வசம் இருந்தபோதுதான் அத்தனையும் நடந்தது என்று திட்டவட்டமாக கூறுகிறது. பிறகு எதற்காக நீங்கள் ராஜினாமா செய்யாமல் இருக்கிறீர்கள், யாருக்காக காத்திருக்கிறீர்கள்?.
சர்ச்சைக்குரிய, தனியார் சுரங்க உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம். அப்படிச் செய்வதிலிருந்து அரசை எது தடுக்கிறது, யார் தடுக்கிறார்கள்?.
சுரங்க ஊழல் விவகாரத்தில் அரசுக்கும், பாஜகவுக்கும் ரகசிய ஒப்பந்தம் இருப்பது போலத்தான் தெரிகிறது.
இப்போது கத்காரியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். பாஜக ராஜய்சபா எம்.பி. அஜய் சன்செட்டி உங்களது தொழில் முறை பார்ட்னரா என்பதை கத்காரி விளக்க வேண்டும். சுரங்க அனுமதி மூலம் நீங்களும் பலன் பெற்றிருக்கிறீர்களா என்பதையும் கத்காரி விளக்க வேண்டும்.
பிரதமரின் ராஜினாமாவை நீங்கள் கோருகிறீர்கள். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேசமயம், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள உங்களது கட்சி முதல்வர்களின் நிலைப்பாடு என்ன?. அவர்கள் ஏன் ராஜினாமா செய்யாமல் உள்ளனர்?
இப்படி பிரதமருக்கும், கத்காரிக்கும் தலா 10 கேள்விகளைக் கேட்டுள்ளார் கேஜ்ரிவால்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications