யாழ். ஸ்ரீதர் திரையரங்கை 16 ஆண்டாக ஆக்கிரமித்திருக்கிறார் டக்ளஸ்- உரிமையாளர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் நகரத்தினுள் உள்ள ஸ்ரீதர் திரையரங்கை கடந்த 16 ஆண்டுகளாக வாடகை கூடத்தராமல் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்திருக்கிறார் என்று அதன் உரிமையாளரான ரட்ண சபாபதி மகேந்திர ரவிராஜ் புகார் கூறியுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வரும் மகேந்திர ரவிராஜ், அங்குள்ள "தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டக்ளஸ் தேவானந்தா மீது புகார் தெரிவித்துள்ளார். ரவிராஜின் புகாருக்கு பதிலளித்திருக்கும் டக்ளஸ், ரவிராஜ்தான் திரையரங்கின் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தினால் இந்த ஆண்டு இறுதிக்குள் அதனைக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் ரவிராஜோ, இவர் இப்படித்தான் கடந்த ஆண்டும்சொன்னார், அதற்கு முந்திய ஆண்டும் சொன்னார். நான்தான் திரையரங்கின் உரிமையாளர் என்பது முழுக் யாழ்ப்பாண குடாநாட்டுக்குமே தெரியும். அது டக்ளஸூக்கும் நன்கு தெரியும்'' என்று நொந்துபோய் கூறியுள்ளார்.. ரவிராஜுக்கு இப்போது வயது 66. அவரது குடும்பத்தின் சொத்தாக யாழ்ப்பாணத்தில் எஞ்சி இருப்பது ஸ்ரீதர் திரை அரங்கு மட்டும்தான்! டக்ளஸி "நிஜமுகம்" தெரிந்த கதை என்பதால் ரவிராஜூக்காக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராவதில்லை என்றும் அவர் புலம்பியிருக்கிறார்.

1970களில் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திரையரங்காக இருந்தது ஸ்ரீதர் தியேட்டர். தற்போது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+