'டைம்ஸ் ஆப் இந்தியா' மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு-சென்னை நீதிமன்றத்தில் தாக்கல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சார்பில் டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில்,
கடந்த 25ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில், கொலை செய்வதற்காக தனது டிரைவர்களுக்கு தமிழக அரசு உரிமம் வழங்குகிறது' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
அந்த செய்தியில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில், தமிழக போக்குவரத்துத்துறை, போலீஸ் துறை அலட்சியம் காட்டுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மக்களை காப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா எத்தனையோ நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கென்று பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த பத்திரிகையின் செய்தி, தமிழ்நாட்டிலுள்ள சாலைகள் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது. மக்களிடம் மிகுந்த மரியாதையை பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை இப்படி அவதூறு செய்தது, கெட்ட உள்நோக்கம் கொண்டது.
எனவே, அந்த பத்திரிகை வெளியீட்டாளர் எஸ்.சந்தான கோபால், ஆசிரியர் சுனில் நாயர், செய்தியாளர் கார்த்திகேயன் ஹேமலதா ஆகியோரை அவதூறு குற்றத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications