ஹைகோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் கூடங்குளம் போராட்டம் தொடரும்: ஆன்டன் கோம்ஸ்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அகில இந்திய மீனவர் சங்க தலைவரும், அணு உலை எதிர்ப்பாளர் கூட்டமைப்பு தலைவருமான ஆன்டன் கோம்ஸ் தெரிவி்ததுள்ளார்.

இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்திய அரசு மக்கள் மீது அணு உலைகளை திணிக்க முயல்கிறது. முன்னாள் தேர்தல் ஆணையர், முன்னாள் கப்பல் படை தளபதி, முன்னாள் அணு சக்தி கழக தலைவர் உள்ளிட்டோர் வெளிப்படையாக அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் அணு உலையை மூட வலியுறுத்தி வருகின்றனர்.

அணு உலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் போராட்டம் தொடரும். வரும் டிசம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் காரைக்காலில் தேசிய மீனவர் பேரவை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று கோரி தமிழக அரசும், டெசோ மாநாட்டில் திமுகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவில்லை என்றார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கான தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+