2ஜி வழக்கில் வாங்கிக் கட்டியதை சிபல் மறந்துவிட்டார்: பாஜக தாக்கு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பாடம் கற்றுக்கொள்ளாமல் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நஷ்டமே ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் என்று பாஜக ராஜ்யசபை துணை தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஒரு பைசா கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று கபில் சிபல் தெரிவித்திருப்பது அவர் 2ஜி வழக்கில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. முன்னதாக 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கியதில் அரசுக்கு எந்தவித நஷ்டமும் ஏற்படவில்லை என்று அவர் கூறி பிறரின் பரிகாசத்திற்கு ஆளானார். தற்போது அதே போன்றே பேசுகிறார்.
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்ட நிறுவனங்கள் அரசுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. மேலும் கடந்த 4-5 ஆண்டுகளாக சுரங்க வேலைகள் நடைபெறாததால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கபில் சிபலின் கருத்து நிலக்கரி ஊழல் குறித்து அரசு விவாதத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்றார்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications