For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புதுச்சேரி மாநிலம்

By Mathi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 2-வது தாளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. முதல் தாளில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த ஜூலை 12-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பட்டயம் பெற்றவர்களும், பட்டம் பெற்றவர்களும் தேர்வெழுதினர். முதல் தாளை 4,769 பேரும், 2-வது தாளை 4,501 பேரும் எழுதினர். இதன் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் 60 விழுக்காடு அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மொத்தமே 20 பேர் தான் அதுவும் முதல் தாளில் மட்டும் புதுவையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளில் ஒருவர் கூட பாஸாகவில்லை.

மீண்டும் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது. இதில், ஜூலை 12-ம் தேதி தேர்வெழுதி, 60 விழுக்காடு மதிப்பெண் பெறத் தவறியவர்கள் கலந்து கொள்ளலாம்.

English summary
Puducherry TET exam announced yesterday. But no one pass in TET 2nd paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X