திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் முற்றுகை-கைது!

Subscribe to Oneindia Tamil

Kalai Kaviri college
திருச்சி: திருச்சிக்கு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த சிங்கள மாணவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகையிட முயன்றனர் நாம் தமிழர் கட்சியினர். அவர்களைப் போலீஸார் தடுத்துக் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து தொடர்ந்து யாரேனும் தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் தமிழர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் சிங்களக் கலாச்சாரத்தைப் பரப்புவதாக கூறிக் கொண்டு ஒரு குரூப் கொழும்பிலிருந்து கிளம்பி திருச்சிக்கு வந்துள்ளது. கொழும்பைச் சேர்ந்த இந்தக் குழுவில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்பட 63 பேர் உள்ளனர்.

திருச்சி கலைக்காவிரி நுண் கலைக் கல்லூரியில் இவர்கள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்தனர்.

கல்லூரி வாசலில் கூடிய அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது சிங்களக் குழுவினரைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் கோஷமிட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து சிங்களக் குழுவினரின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+