தமிழக தகவல் ஆணையர்களாக ஐவரை நியமித்தார் ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர்களாக 5 பேரை தமிழக ஆளுநர் நியமித்துள்ளார்.
தமிழக தகவல் ஆணையர்களாக யாரை நியமிப்பது என்று குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தின் முடிவில் தகவல் ஆணையர்களாக 5 பேரை ஆளுநருக்கு நேற்றைய கூட்டம் பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில் தமிழக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையர்களாக வி. சரோஜா, கிறிஸ்டோபர் நெல்சன், பி. தமிழ்செல்வன், பி.நீலாம்பிகை, எஸ்எப். அக்பர் ஆகியோரரை ஆளுநர் நியமித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications