மதுரையில் குஷ்பு கூட்டத்தைப் புறக்கணித்த மு.க. அழகிரி ஆதரவாளர்கள் 12 பேருக்கு நோட்டீஸ்
சென்னை: மதுரையில் நடிகை குஷ்பு கலந்து கொண்ட டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் 12 பேருக்கு திமுக தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் மற்றும் பொதுக்கூட்டத்தை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக அப்போது அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது திமுக தலைமை. இதில் அவைத்தலைவராக இருந்த இசக்கி முத்து என்பவர் கொடுத்த பதிலை ஏற்காமல் அவரை கட்சியைவிட்டே நீக்கியது திமுக. மற்றவர்களின் விளக்கத்தை ஏற்றது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மதுரையில் குஷ்பு கலந்து கொண்ட டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனையும் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக தற்போது 12 திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நோட்டீசில், மதுரையில் குஷ்பு கலந்து கொண்ட தி.மு.க. டெசோ மாநாடு விளக்க பொதுக் கூட்டம் தொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், ஒட்டப்பட்ட சுவரொ ட்டிகள் போன்ற வற்றில் உங்கள் பெயர் இடம் பெற்று இருந்தன. ஆனால் கூட்டத்துக்கு வரவில்லை. இதற்கான காரணத்தை ஒரு வாரத்துக்குள் தலை மைக்கு தெரிவிக்க வில்லை என்றால் கட்சி கட்டுப் பாட்டை மீறியதாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திமுகவில் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications