நடுக்கடலில் 9 நாட்களாக உயிருக்குப் போராடிய 43 இலங்கையரை காப்பாற்றியது இந்தோனேஷியா
ஜகார்த்தா: ஆஸ்திரேலியா நோக்கி சென்றபோது நடுக் கடலில் படகு பழுதானதால் 9 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 43 பேரை இந்தோனேஷிய கடற்படை மீட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்கள் உட்பட 43 பேரை ஏற்றிக் கொண்டு ஆஸ்திரேலியா நோக்கி புகலிடம் கோரிச் சென்ற படகு ஒன்று 9 நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பழுதானது. இதனால் உணவு, நீர் ஏதுமின்றி 9 நாட்களாக அவர்கள் பட்டினியால் வாடித்துடித்தனர்.
சுமத்திராவுக்கு அருகில் உள்ள மென்டாவி என்ற தீவையொட்டி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தப் படகைக் கண்டு மீனவர்கள் இந்தோனேஷிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த்னர். இதைத் தொடர்ந்து 43 இலங்கையரையும் பாதுகாப்பாக மீட்டிருப்பதாக இந்தோனேஷிய கடற்படை தெரிவித்துள்ளது.
பலநூறு பேருடன் ஆஸ்திரேலியா நோக்கி ஆபத்தான கடல்பயணத்தை மேற்கொள்வது என்பது நாள்தோறும் நடந்தேறுகிற ஒன்றாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்புதான் நூற்றுக்கணக்கானோருடன் அகதிகள் படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கி பலரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications