கிரானைட் ஊழலால் ரூ.35,000 கோடி நஷ்டம்: ஜி.ராமகிருஷ்ணன் கணிப்பு
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேலூர் தாலுகாவில் 35 கிராமங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட்டனர். கிரானைட் முறைகேடு ரூ.30,000 முதல் ரூ.35,000 கோடி வரை நடந்திருக்க வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி உள்பட குவாரிகள் செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும். இதில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு சிபிஐ விசாரணை தேவையி்ல்லை என கூறுவது ஏன் என தெரியவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி வரும் 12ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications