உதவி இயக்குநர் உள்பட 4 பேரை மட்டுமே மணந்தேன்... ஷானாஸ் பரபரப்பு வாக்குமூலம்

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஷானாஸ். இவர் மோசடியாக 50 திருமணங்களைச் செய்து லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் மீது புளியந்தோப்பு பிரசன்னா, மணிகண்டன், சரவணன் உள்ளிட்ட பலர் போலீஸில் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து ஷானாஸ் தலைமறைவானார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில், பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே சுற்றிக் கொண்டிருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
நேற்று இரவு பிடிபட்ட ஷானாஸ் இன்று அதிகாலையில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அதிகாலை முதல் முற்பகல் 11 மணி வரை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் மகளிர் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஷானாஸ் போலீஸ் விசாரணையின்போது பரபரப்புத் தகவல்களைக் கூறியதாக தெரிகிறது. அதுகுறித்த விவரம்...
10வது படித்தபோது முதல் திருமணம்
ஷானாஸின் தாயார், ஷானாஸின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஷானாஸ் 10வது படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். பின்னர் அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் ஷானாஸின் தந்தை இறந்து விட்டார். இதையடுத்து ஷானாஸ், சி்த்திக்கைப் பிரிந்தார். அதன் பின்னர் நாளிதழில் வந்த விளம்பரம் ஒன்றைப் பார்த்த அவர் சென்னைக்கு வந்தார். அங்கு கீழ்ப்பாக்கத்தில் நசிமுதீன் என்பவர் நடத்தி வரும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்தார்.
அதன் பின்னர் அவர் சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்தார். 2வது கணவருடன் பின்னர் திருச்சிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு சில மாத குடும்ப வாழ்க்கைக்குப் பின்னர் ராகுலைப் பிரிந்து மீண்டும் சென்னைக்கு வந்து மறுபடியும் அதே ஸ்டோர்ஸில் வேலைக்குச் சேர்ந்தார்.
அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் விலகினார். வேளச்சேரியில் தங்கிய அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்குப் பல ஆண்களின் தொடர்பு கிடைத்ததாக தெரிகிறது. அதன் மூலம் பலரை மோசடியாக அவர் தனது வலையில் வீழ்த்தியதாக தெரிகிறது.
போலீஸாரிடம் ஷானாஸ் கூறுகையில், சித்திக், பிரசன்னா உள்பட 4 பேரை மட்டுமே மணந்துள்ளதாக கூறியுள்ளார். மற்ற புகார்களை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரை மேற்கொண்டு விசாரிக்கும்போது மேலும் பல தகவல்களைப் பெற முடியும் என போலீஸார் நம்புகின்றனர். இதனால் நாளை அவரை போலீஸ் காவலில் அனுப்புமாறு கோரி மனு செய்யவுள்ளனர்.
கர்ப்பமாக இருக்கிறாரா?
ஷானாஸ் கடைசியாக குடும்பம் நடத்திய நபர் புளியந்தோப்பு பிரசன்னாதான். அவரிடம்தான் வேலூர் போவதாக கூறி விட்டு தலைமறைவானார் ஷானாஸ். அதற்குப் பிறகு அவர் வரவில்லை.
பிரசன்னாவும், ஷானாஸும் 3 மாதம் ஒன்றாக குடும்பம் நடத்தியுள்ளனர். தற்போது ஷானாஸ் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து அதை உறுதிப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications