தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு- கர்நாடக விவசாயிகள் மாண்டியாவில் போராட்டம்
மாண்டியா: தமிழகத்துக்கு கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து அம்மாநிலத்தின் மாண்டியாவில் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகத்தின் சாகுபடிக்காக காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழக முதல்வரின் இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் நஞ்சுண்டகவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையையும் முடக்கிப் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த நஞ்சுண்டே கவுடா, தமிழக அரசின் நெருக்கடிக்கு பணிந்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டால் விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications