இந்தியா வருகை தந்தார் சீனா பாதுகாப்பு அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: 8 ஆண்டுகாலத்துக்குப் பிறகு முதல் முறையாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெ லியாங் குவாங்லி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
மும்பையில் வந்து இறங்கி குவாங்லி, அங்குள்ள மணிபவன் காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். டெல்லியில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் நிறுத்தப்பட்டிருக்கும் கூட்டு ராணுவ பயிற்சி தொடர்பாகவும் இருநாட்டு எல்லைப் பாதுகாப்பு தொடர்பாகவும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படக் கூடும்.
இதேபோல் அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications