13ல் கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்கும் பிரதமர் மன்மோகன் சிங்
கொச்சி: வரும் 13ம் தேதி கொச்சி ரயில் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார்.
உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் 13ம் தேதி முதல் துவங்குகிறது.
இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டங்களை வரும் 13ம் தேதி கொச்சியில் நடக்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் துவங்கி வைத்து உரையாற்றுகிறார்..
மேலும், இந்த விழாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவாகாரத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ், கேரள எதிர்க்கட்சி தலைவரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக செப்டம்பர் 12ம் தேதி கொச்சியில், வளரும் கேரளா என்ற தலைப்பில் வர்த்தக மாநாட்டையும், மறுநாள் (13ம் தேதி) கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தையும் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்க உள்ளார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கேரளாவில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications