தொகுதி நிதி ரூ5 கோடியில் ஒருபைசாவக் கூட தொகுதி மக்களுக்காக செலவழிக்காத சோனியா, ராகுல்

தொகுதி மக்களுக்கு நலத் திட்டங்கள் மேற்கொள்வதற்காக எம்.பிக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ5 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் தொகுதியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள முடியும். இப்படி ஒதுக்கப்பட்ட நிதியை நடப்பாண்டில் குறுகிய காலத்திலேயே 110 எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டனர்.
ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல், நேரு குடும்பத்து இன்னொரு மருமகள் மேனகா காந்தி, அவரது மகன் வருண் காந்தி ஆகிய பேரும் நடப்பாண்டில் தொகுதி மேம்பாட்டு நிதியை தொடவே இல்லை. அதில் இருந்து ஒரு பைசாவை எடுத்து தொகுதி மக்களுக்காக செலவழிக்கவில்லை. கடந்த ஆண்டு மேனகாவும் வருணும் முழுத் தொகையையும் செலவிட்டிருந்தனர். கடந்த ஆண்டும் சோனியாவும் ராகுலும் இதேமாதிரி ஒத்த பைசாவைக் கூட செலவழிக்கவில்லை.
இவர்கள் இப்படி செலவு செய்யாத பணம் மீண்டும் மத்திய அரசுக்குத்தான் செல்கிறது! தொகுதி மக்களை இதே மாதிரி கவனிச்சா அடுத்த தேர்தலில் "அமோக"மாக தோற்றுவிடும் காங்கிரஸ்!












Click it and Unblock the Notifications