கிரானைட் கொள்ளை: தொடரும் அதிகாரிகள் வேட்டை- மேலும் 7 பேர் சிக்குகின்றனர்

அதிகாரிகள் உடந்தை
தமிழகத்தை உலுக்கிய மதுரை சுற்றுவட்டார கிரானைட் கொள்ளை தொடர்பாக 32-வது நாளாக அப்பகுதியில் சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே டாமின் அதிகாரிகள் மீதும் புகார் எழுந்தது. மேலூரை அடுத்த கீழவளவு அம்மன்கோவில் பட்டியில் பொக்கிஷ மலை மேற்கு பகுதியில் டாமின் குவாரிக்கு அருகே 3 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பஸ் கிரானைட் குவாரி உள்ளது. இந்த குவாரியின் பங்குதாரராக மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி இருந்தார். இந்த குவாரியின் அருகே டாமின் குவாரி உள்ளது. அந்த குவாரியில் கல் அறுக்கும் உரிமம் பெற்று அதை விட அதிகமாக கணக்கின்றி அதிக கற்கள் வெட்டி கடத்தியதாக ஒலிம்பஸ் குவாரி மீதும், அதற்கு டாமின் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் கீழவளவு வி.ஏ.ஓ. பார்த்திபன் போலீசில் புகார் செய்தார். மனோகரன், ஜவகர், ரகுபதி ஆகிய 3 டாமின் அதிகாரிகளை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேலூரில் முன்பு தாசில்தாராக பணியாற்றிய சுப்புவை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தான் 7 மாதம் மட்டுமே அங்கு பணியாற்றியதாக கூறினார். இதையடுத்து விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராகவேண்டும் என்று தெரிவித்து அவரை போலீசார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
உதவி இயக்குநர் ராஜாராம் கைது
மதுரை கனிம வளத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜாராம் என்பவர், தனது பதவிக்காலத்தில் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிம வளத்துறையில் பணியாற்றிய 7 அதிகாரிகளுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள், காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி, காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.
துரை தயாநிதி தலைமறைவு
இந் நிலையில் துரை தயாநிதி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications