ஒபாமாவை வெறும் நாற்காலி என கிண்டலடித்த க்ளின்ட் ஈஸ்ட்வுட்!

ஹாலிவுட் ஜாம்பவான் க்ளிண்ட் ஈஸ்ட்வுட், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, வெறும் நாற்காலியை ஒபாமா எனக் குறிப்பிட்டு, பேட்டி காண்பது போல நடித்துக் காட்டினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் பலத்த கண்டனங்கள் வந்தவண்ணம் உள்ளன.
நடுநிலை வாக்காளர்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஈஸ்ட்வுட்டின் பேச்சு, ராம்னியின் குடியரசு கட்சி மாநாட்டிற்கு களங்கமாகவே பார்க்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஈஸ்ட்வுட்டின் முன்னமே தயார் செய்யப்படாத பேச்சால், கட்சிக்குள்ளும் அதிருப்தி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதிபர் ஒபாமா இந்தப் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் குறிப்பிடுகையில், "க்ளின்ட் ஈஸ்ட்வுட் அமெரிக்காவின் சொத்து. நான் மட்டுமல்ல, வெள்ளை மாளிகையில் உள்ள பலரும் அவரது தீவிர ரசிகர்களே. அவரது பேச்சு என்னைப் புண்படுத்தவில்லை. அப்படி நினைத்தால் நான் வேறு வேலை பார்க்க வேண்டியிருக்கும்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications