2வது காதலியின் ஜட்டியை வாக்குவம் கிளீனிரில் மறைத்த காதலன்.. பிரிந்து போனார் முதல் காதலி!

Subscribe to Oneindia Tamil

Melissa Smeaton
லண்டன்: முதல் காதலிக்குத் தெரியாமல் 2வதாக ஒரு பெண்ணைக் காதலித்து உல்லாசமாக இருந்து வந்த நபர் 2வது காதலியின் ஜட்டியை முதல் காதலியின் வீட்டு வாக்குவம் கிளீனில் மறைத்து வைத்து மாட்டிக் கொண்டார். தனது காதலரின் செயலால் அதிருப்தி அடைந்த முதல் காதலி தற்போது காதலரைப் பிரிந்து சென்று விட்டார்.

லண்டன் அருகே உள்ள கிராய்டன் என்ற இடத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. கிராய்டனைச் சேர்ந்தவர் 32 வயதான மெலிசா ஸ்மெட்டன். இவர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து குடும்பமும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மெலிசா வீட்டு வாக்குவம் கிளீனர் திடீரென வேலை செய்யவில்லை. இதையடுத்து பக்கத்தில் இருந்த ஒரு ரிப்பேர் கடைக்குக் கொண்டு சென்றார் மெலிசா. அதை வாங்கிப் பார்த்த பழுது நீக்குபவர் உள்ளே எதுவோ அடைத்திருப்பதைப் பார்த்தார். பின்னர் வாக்குவம் கிளீனரை கழற்றியபோது உள்ளே இருந்து இரண்டு பெண்கள் அணியும் ஜட்டி வெளியே வந்தது.

அதைப் பார்த்து மெலிசா திடுக்கிட்டார். காரணம், அது அவரது ஜட்டி அல்ல. குழப்பமும், கோபமும் அடைந்த மெலிசா ஜட்டி மற்றும் வாக்குவம் கிளீனருடன் வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கிருந்த தனது காதலரைப் பார்த்து இந்த ஜட்டி யாருடையது என்று கோபமாக கேட்டார்.

ஒரு கையில் ஜட்டியும், இன்னொரு கையில் வாக்குவம் கிளீனருமாக கோபத்துடன் பத்ரகாளி போல நின்ற மெலிசாவைப் பார்த்து சற்று பயந்துதான் போனார் காதலர். இருந்தாலும் சுதாரித்து, இது யாரோ ஜட்டிமா மெலிசா என்று கேள்வியைத் திருப்பிப் போட்டார். ஆனாலும் விடாத மெலிசா, தொடர்ந்து துருவித் துருவி விசாரித்தார். பல மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் இறுதியில் உண்மையை ஒப்புக் கொண்டார் காதலர்.

தனது ரகசியக் காதலியின் ஜட்டிதான் இது என்று கூறிய அவர் அதை தான்தான் மறைத்து வைத்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனால் கோபமடைந்த மெலிசா, காதலரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இனிமேல் சந்திக்க வேண்டாம் என்றும் கூறி விட்டார்.

இதுகுறித்து மெலிசா கூறுகையில், எனது காதலருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்குத் தெரியும். இதுகுறித்து நான் பலமுறை அவரைக் கண்டித்துள்ளேன். ஆனால் இப்படி வாக்குவம் கிளீனரில் இன்னொரு பெண்ணின் ஜட்டியை ஒளித்து வைக்கும் அளவுக்குப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை.

வாக்குவம் கிளீனருக்குள்ளிருந்து ஜட்டியை எடுத்து மெக்கானிக் என்னிடம் நீட்டியபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப வெட்கமாகி விட்டது. கோபமும் பொங்கி விட்டது என்றார் பொறுமியபடி.

ஏன் பங்காளி, ஜட்டியை ஒளிச்சு வக்க உனக்கு வேறு இடமா கிடைக்கல...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+