4 வருடங்களில் மெருகேறிய மிஷலின் அழகு.. ஒபாமா மட்டும் அப்படியே!

2008ம் ஆண்டுதான் மிஷல் ஒபாமா ஸ்பாட்லைட்டுக்கு வந்தார். அவரது கணவர் பராக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டதைத் தொடர்ந்து மிஷலும் கூடவே வெளிச்சத்திற்கு வந்தார். அன்று முதல் இந்த நிமிடம் வரை மிஷல் குறித்த செய்திகள் வராத பத்திரிக்கையே இல்லை என்று கூறும் அளவுக்குப் படு பிசியாக இருக்கிறார்.
44 வயதாகும் மிஷல் ஒபாமா, பேஷன் உலகினரின் மனம் கவர்ந்த பெண்மணியாகவும் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், மிஷலின் பேஷன் ஆர்வம்தான். அவரது டிரஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைல், மேக்கப் என சகலமும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விஷயங்களாக மாறியுள்ளன.
மேக்கப், துணிமணிக்காகவே நிறைய செலவு பண்ணுகிறார் என்ற சலசலப்பு இருந்தாலும் கூட மிஷலின் ஸ்டைலையும், அழகையும் பாராட்டாதவர்களே இல்லை.
ஒபாமா அதிபராக இருந்தபோது இருந்த மிஷலுக்கும் தற்போதைய அவரது தோற்றத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறும் பேஷன் துறையினர், மிஷலுக்கு அழகு மேலும் கூடியுள்ளது. முன்பை விட பளிச்சென இருக்கிறார், படு க்யூட்டாக இருக்கிறார் என்றும் புகழ் பாடுகின்றனர்.
அவரது ஹேர் ஸ்டைல் இப்போது சூப்பராக இருக்கிறது. உடல் எடையையும் கட்டுக்குக்குள் கொண்டு பிட்டாக இருக்கிறார். மேக்கப்பும் முன்பை விட இப்போது சிறப்பாக இருக்கிறது என்றும் பாராட்டுகிறார்கள். மொத்தத்தில் நான்கு ஆண்டுகளில் மிஷலின் அழகு ஏகத்துக்கும் கூடி விட்டதாக கூறுகிறார்கள் அவரை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள்.
அதேசமயம், பராக் ஒபாமா அப்படியேதான் இருக்கிறாராம். பெரிய அளவில் அவரிடம் மாற்றம் இல்லையாம். மேலும் அவரது தலைமுடி மேலும் அதிகமாக வெளுக்கு ஆரம்பித்துள்ளதாம். 2008ல் அதிபர் பதவியில் அமர்ந்தபோது ஒபாமாவின் முகத்தில் சுருக்கம் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது சுருக்கம் நிறையத் தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.
முன்பு போல அவரிடம் இளமைத் துள்ளலைக் காண முடியவில்லை. ஏதோ ஒன்று அவரிடம் மிஸ் ஆவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதிபர் பதவியில் அவர் பெரும் அழுத்தத்தையும், பாரத்தையும் சுமப்பதால் அவரிடம் ஒருவிதமான சோர்வு வந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக பொருளாதார மந்த நிலை ஒபாமாவை வெகுவாக பாதித்து விட்டதாக கூறப்படுகிறது. வங்கிகள் சரமாரியாக மூடப்படுவதும் அவருக்கு நிறைய கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அவருடைய நண்பர்களே கூட அவரை விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளதாக கூறுகிறார்கள் இந்த அரசியல் நிபுணர்கள்.
ஆனால் ஒபாமாவுக்கு நேர் மாறாக மிஷல் இருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடன், படு சுறுசுறுப்பாக ஒரு டீன் ஏஜ் பெண் போல அவர் இருப்பதாக பாராட்டுகிறார்கள்.
தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் மிஷல் அதிக கவனம் காட்டுகிறாராம். அவரது தலைமுடி முன்பு போல பட்டையாக இல்லாமல், மென்மையாக காணப்படுகிறதாம். கண் புருவத்தை முன்பை விட அழகாக இப்போது திருத்தியுள்ளார் மிஷல். தனது கண்ணுக்கும், முகத்துக்கும் பொருத்தமான ஐலைனர், மஸ்கரா, ஐஷேடோவை பயன்படுத்துகிறாராம் மிஷல்.
2009ம் ஆண்டு உலகின் அழகான 100 பெண்கள் வரிசையில், மிஷலும் இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications