தள்ளிப்போகும் தமிழக அமைச்சரவை மாற்றம்: அமைச்சர்கள் நிம்மதி

அமைச்சரவையில் உள்ள சிலர் மீது கோஷ்டி பூசல், அதிக வசூல், அடாவடி வசூல், அரசு நலத்திட்டங்களில் அலட்சியம், துறை செயல்பாடுகளில் மைனஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை அடுத்து அமைச்சர்கள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாம். மேலும் சிலர் ஏடா கூட நட்பு காரணமாகவும் சிக்கியுள்ளார்களாம். இந்த தகவலை எல்லாம் உளவுத்துறை முதல்வர் அலுவலகத்தில் அளித்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சர்களில் 7 பேரின் இலாகா பறிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்யது. தமிழக அமைச்சரவையில் உள்ள 7 அமைச்சர்கள் நீக்கப்படலாம் அல்லது துறை மாற்றப்படலாம் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இதனால் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை சிலர் வளைத்துப்போட்டு தங்களது எதிர்காலம் குறித்து உறுதிப்படுத்திக் கொண்டனர்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் தற்போது அமைச்சரவையை மாற்றினால் தேவையில்லாத குழப்பம் வரலாம். அதனால் தற்போதைக்கு மாற்றத்தை ஒத்திவைக்கலாம். எல்லை மீறி செல்பவர்களை மட்டும் கொஞ்சம் தட்டி வைக்கலாம் என முதல்வர் முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
இதனால் தமிழக அமைச்சரவை மாற்றம் தற்போதைக்கு இல்லை என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள் சிலர் நிம்மதி பெரு மூச்சுவிட்டதோடு, முகத்தில் புன் சிரிப்போடு காணப்படுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications