அடடா, 'அதை' சாப்பிட்டு 'அது' போச்சே...!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு வாலிபர், தனது ஆணுறுப்பை பெரிதாக்க மாத்திரை சாப்பிட்டு ஆணுறுப்பு பெரிதாவதற்குப் பதில் சேதமடைந்து விட்டதால், கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளார்.
29 வயதாகும் அந்த நபரின் பெயர் அட்ரியன் கார்ட்டர். இவர் சாப்பிட்ட மாத்திரையின் பெயர் விரில்லிஸ் புரோ என்பதாகும். இதை சாப்பிட்டால் ஆணுறுப்பு நன்கு நீட்சி அடைந்து அளவு பெரிதாகும் என்று கூறப்பட்டதால் அதை வாங்கியுள்ளார் அட்ரியன்.
அந்த மாத்திரையுடன் ஹோட்டலுக்குப் போன அவர் தனது துணையுடன் சேருவதற்கு முன்பு மாத்திரையைப் போட்டுள்ளார். உறுப்பு நீண்டு, உறவு அட்டகாசமாக இருக்கும் என்று நினைத்திருந்த அவரது தலையில் இடியைத் தூக்கிப் போட்டு விட்டது அநத் மாத்திரை.
ஆணுறுப்பு நீள்வதற்குப் பதில் அதிலிருந்து ரத்தம்தான் கொட்டியதாம். ரத்தம் கொட்டி வலியால் துடித்துள்ளார் கார்ட்டர். இதையடுத்து விரைந்து வந்த டாக்டர்கள் முதலுதவி கொடுத்து பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது ஆணுறுப்புக்கு மருந்து போட்டு சரி செய்தனர்.
இருப்பினும் இனிமேல் கார்ட்டர் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது என்றும், அவரால் குழந்தை பெற முடியாது என்றும் டாக்டர்கள் கூறி விட்டனர். அந்த அளவுக்கு மோசமாக சேதமடைந்து போய் விட்டதாம் கார்ட்டரின் ஆணுறுப்பு. இதனால் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளார் கார்ட்டர்.
தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த மருத்துக் கம்பெனி மீது தற்போது வழக்குப் போட்டுள்ளார்.
இதுகுறித்து கார்ட்டரின் பெண் வக்கீல் மெலிசா மூர் கூறுகையில், இது மிகவும் கொடுமையானது. பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. இது வழக்கத்திற்கு விரோதமானது. கார்ட்டருக்கு மிகவும் இளம் வயது. ஆரோக்கியமானவரும் கூட. அவருக்கு வேறு எந்த உடல் ரீதியான பிரச்சினையும் இல்லை. வேறு மருந்துகளும் அவர் சாப்பிடவில்லை. அவருக்குப் போய் இப்படி ஒரு சேதாரம் ஏற்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்றார்.
மனுஷனுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க...
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications