கசாப்பை உடனே தூக்கில் போடுங்கள்: குடியரசுத் தலைவருக்கு சிவசேனா கோரிக்கை
மும்பை: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதி அஜ்மல் கசாப்பை உடனே தூக்கிலிட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு சிவசேனா கட்சி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்மை பாதுகாப்பு இலக்காக தீவிரவாதிகள் கருதுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணத்தை மாற்றியாக வேண்டும். மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட கசாப்புக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறது. இதனால் இனியும் காலதாமதம் செய்யாமல் கசாப்பை உடனே தூக்கிலிட தாங்கள் தலையிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் .ஆனந்த் கீதே, சஞ்சய் ராவல், ஆனந்த்ராவ் அட்சுல், சந்திரகாந்த் காய்ரே, பரத்குமார் ராவத், அனில் தேசாய், பவானா கவாலி, சுபாஷ் வான்கடே, கணேஷ்ராவ் டத்கோங்கர், கஜனன் பாபர், பாவ்சாகேப் வாக்சாரே உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications