சிவகாசி விபத்துக்கு பொறுப்பேற்று தொழில்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்: தேமுதிக வலியுறுத்தல்
சென்னை: சிவகாசி முதலிப்பட்டியில் 38 பேரை பலி கொண்ட கோர விபத்துக்குப் பொறுப்பேற்று தமிழக தொழில்துரை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ.வான தேமுதிகவின் மாஃபா பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மாஃபா பாண்டியராஜன் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதியில் மோசமான சாலைகள் இருக்கின்றன. இவற்றை சீரமைக்க அரசு அதிகாரிகளிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
பாதுகாப்பற்ற பட்டாசு ஆலைகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்கின்றனர். அரசு நிர்வாகத்தில் அதிகாரிகளிடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லை. இதுபற்றி சட்டப்பேரவையில் பேசும்போது சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
இத்தகைய கோர விபத்துக்குப் பொறுப்பேற்று தமிழக தொழில்துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications