ஸ்டாலினைத் தொடர்ந்து வேலூர் சிறையில் வீரபாண்டியாரை சந்தித்த கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Veerapandi Arumugam
வேலூர்: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக தலைவர் கருணாநிதி இன்று சந்தித்து பேசினார்.

சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று பிற்பகல் 12.10 மணிக்கு வேலூர் சிறைக்கு சென்று வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், துரைமுருகன், எ.வ. வேலு, மாவட்ட செயலாளர் காந்தி, முகமது சகி ஆகியோர் கருணாநிதியுடன் சென்றிருந்தனர்.

கருணாநிதி வரும் தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் சிறை வாசலில் குவிந்துவிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் தான் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவியுடன் சென்று வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தார். அப்போது வீரபாண்டியார் கருணாநிதியை நலம் விசாரித்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் ஸ்டாலின் சென்ற கையோடு கருணாநிதியும் வேலூர் சிறைக்கு சென்று வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+