ஷானாஸ் மீது 2வது கைதும் பாய்ந்தது

பலரைத் திருமணம் செய்து மோசடி செய்து ஏமாற்றியதாக ஷானாஸ் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கடைசியாக அவர் குடும்பம் நடத்திய புளியந்தோப்பு பிரசன்னா உள்ளிட்டோர் ஷானாஸ் மீது சென்னை காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸார் ஷானாஸைத் தேடி வந்தனர்.
செப்டம்பர் 1ம் தேதி ஷானாஸை பெங்களூரில் வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஷானாஸ் மீது தற்போது தி.நகர் ராஜா, புளியந்தோப்பு பிரசன்னா, திருவொற்றியூர் சரவணன், அடையாறு சரவணன், புரசைவாக்கம் சம்சுதீன் ஆகியோர் புகார் கொடுத்துல்ளனர். அதில், ஒரு புகாரின் பேரில் மட்டுமே ஷானாஸைக் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தி.நகர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் போலீஸார் ஷானாஸைக் கைது செய்துள்ளனர். சிறைக்குச் சென்று இது தொடர்பான உத்தரவு ஷானாஸிடம் அளிக்கப்பட்டது.
ராஜா என்ன புகார் கொடுத்தார்?
முன்னதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ராஜாகொடுத்திருந்த புகாரில், நான் துணி வியாபாரம் செய்து வருகிறேன். என்னிடம் ஏழை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று துணிகளும், பணமும் பெற்றுக்கொண்டு ஷானாஸ் ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். இதன் பேரிலேயே தற்போது ஷானாஸைப் போலீஸார் கைது செய்துள்ளனராம்.
இந்தக் கைதைத் தொடர்ந்து ஷானாஸை சைதாப்பேட்டை 17வது பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications