சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் உடல்கள் தகனம்
சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உடல் கருகி பலியான 38 பேரின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி ஓம் சக்தி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட பயங்கர வெடிவிபத்தில் 38 பேர் உடல் கருகி பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த 38 பேரின் உடல்களும் அவரவர் கிராமங்களில் இன்று தகனம் செய்யப்பட்டது. காலையில் நன்றாக வேலைக்குச் சென்றவர்கள் அன்று மாலைக்குள் கரிக்கட்டையாகப் போனதை நினைத்து உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
ஒரே நாளில் இத்தனை பேர் இறந்தது சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications