லைசென்ஸ் ரத்தாகியும் ஆலையை நடத்தி 38 பேரை காவு வாங்கிய அதிமுக கவுன்சிலர்
தீவிபத்து ஏற்பட்டு 38 பேரின் உயிரை காவு வாங்கிய ஓம் சக்தி பட்டாசு ஆலை சிவகாசியைச் சேர்ந்த விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் முருகேசனுக்கு சொந்தமானது. இந்த ஆலை வளாகத்தில் ஓம்சக்தி ப்ளு மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தையும் அவர் நடத்தி வந்துள்ளார். முன்னதாக சிவகாசி வெடிமருந்து கட்டுப்பாட்டு துணை தலைமை அலுவலர் ராமசாமி தலைமையிலான குழு ஓம் சக்தி பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து 40 விதிகள் மீறப்பட்டுள்ளதை கண்டிபிடித்தது.
அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிநது பட்டாசு ஆலையின் உரிமத்தை ராமசாமி ரத்து செய்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பே உரிமத்தை ரத்து செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உரி்மத்தை ரத்து செய்ததோடு மட்டுமின்றி விதி்முறைகளை காரணம் காட்டி பட்டாசு ஆலையை சீல் வைத்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆய்வு மேற்கொண்ட அதிகாரியின் கவனக்குறைவு தான் இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நெஞ்சை பதறவைக்கும் பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:
1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பலி
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பலி
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பலி
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பலி
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர், நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர், சிவகாசியில் 3 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பலி
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பலி
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பலி
ஆக மொத்தம் கடந்த 14 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் கிட்டத்தட்ட 300 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications