13ம் தேதி ஸ்ரீரங்கம் செல்லும் ஜெயலலிதா: விழா ஏற்பாடுகள் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வரும் 13ம் தேதி ஸ்ரீரங்கம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா தனது தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு கடந்த 3ம் தேதி செல்வதாக இருந்தது. அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. அவரது வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் சாலைகள் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் திடீர் என்று அந்த பயணம் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வரும் 8ம் தேதி சென்னை வரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வரவேற்கத் தான் முதல்வர் தனது ஸ்ரீரங்கம் பயணத்தை தள்ளிப்போட்டார் என்று கூறப்பட்டது. மேலும் பிரணாப் முகர்ஜி மற்றும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கு முதல்வர் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்கிறாராம்.

இந்நிலையில் வரும் 13ம் தேதி ஜெயலலிதா ஸ்ரீரங்கம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+