சிவகாசி பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை கடுமையாக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
மதுரை: சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இரு்ப்பதாக கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு செயல்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலை காரணமாக 39 அப்பாவி உயி்ர்கள் முதலிப்பட்டி விபத்தில் பலியாகியுள்ளன.
எனவே இந்த நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில அரசு உயர் மட்டக் கமிட்டி ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடுமையாக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற விபத்து சம்பவங்களில் காயமடைவோருக்கு உயர் தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய மாநில அரசின் சுகாதாரத் துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications