தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள்- வன்முறையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி அங்கு பட்டாசுகள் வெடிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அஞ்சலி செலுத்த வருவோரின் பாதுகாப்பு நலன் கருதி தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்துள்ளது.
அதன்படி, தியாகி இமானுவேல் சேகரன் நினைவு இல்லம் வரும் கார், வேன், பஸ் உட்பட மூடிய வாகனங்களில் மட்டும் செல்ல வேண்டும். வாகனங்களில் மேற்கூரைகளில் பயணம் செய்யக் கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள், பட்டாசுகள், தடிகள், கற்கள், ஒலி பெருக்கிகள் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து வழித்தடங்களில் கண்டிப்பாக வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் வரும் போது மற்றவர்கள் மனம் புண்படும் வகையில், வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களோ, துண்டுப் பிரசுரங்களோ, படங்களோ ஒட்டி வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நினைவு தினத்தின் போது, பரமக்குடியில் பெரும் கலவரம் வெடித்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது. இதனால் இம் முறை மாவட்ட நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications